Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ-ஜீரோ: காங்கிரஸ்-பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (19:49 IST)
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன் என்றும், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தமிழிசையின் கருத்துக்கு அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழி 'அது சூப்பர் ஸ்டார் அல்ல, கற்பனை கதாபாத்திரம்' என பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  வசந்தகுமாருக்கு 'கை'  சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், 'கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா என கேள்வி எழுப்பியதோடு, நாகர்கோவில் நகருக்கு சுற்றுச்சாலை அமைப்பேன் என்ற வாக்குறுதியை பொன்.ராதாகிருஷ்ணன் நிறைவேற்றவில்லை என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments