பாஜக தேர்தல் அறிக்கை ’’சூப்பர் ஸ்டார் ’’ : தமிழிசை பெருமிதம்
, திங்கள், 8 ஏப்ரல் 2019 (16:18 IST)
வரும் மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். சமீபத்தில் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட்,கமலின் மக்கள் நீதி மய்யம், மற்றும் தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இதனையடுத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என்றார். இந்த அறிக்கைக்குப் பெயர் சங்கப் பத்ரா ஆகும். இது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாவது:
விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.5 ஆண்டுகள் வரை ரு. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்
நதிகள் இணைப்பிற்குத் தனி ஆணையம்
நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்
5 ஆண்டுகளிம் 60ஆயிரம் கிமீ சாலைகள் தேசியமயமாக்கப்பயும்
நடாளுமன்ற சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை
சபரிமலை கோவில் விவகாரத்தில் அரசியல் சட்ட பாதுகாப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
நாடு முழவதும் உள்ள பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க நடவடிக்கை
பயங்கரவாதத்தை ஒடுக்க பாதுகாப்ப்பு படைகளுக்குச் சுதந்திரம்
கிராம மக்களுக்கு ரூ. 25 லட்சம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
தேசிய பாதுகாப்புக்கு பாஜக முன்னுரிமை
2022 ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகட்டித் தரப்படும்
மத நம்பிக்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எழுத்து, பேச்சு வடிவில் உள்ள அனைத்து மொழிகளின் நிலைகுறித்து ஆராய நடவடிக்கை குழு அமைக்கப்படும்.
ஆகிய முக்கிய அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தேர்தல் அறிக்கை குறித்து தூத்துக்குடியில் பிரசாரம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நீட் தேர்வு மாற்றியமைக்கப்படும். நீட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது தவறு. மேலும், பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என்று தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்