Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை ரோந்து கப்பல் தமிழக மீன்பிடி படகு மீது மோதல்.. ஒரு மீனவர் உயிரிழப்பு

Mahendran
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (10:54 IST)
இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் தமிழக மீனவர் படகு மீது மோதிய விபத்தில் நான்கு மீனவர்கள் மூழ்கிதாகவும் இதில் மூன்று பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் இன்று இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதால் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதாகவும் அதிலிருந்து நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் 3 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளன.

நெடுந்தீவு அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும் இலங்கை கடற்படை கப்பல் மோதிய வேகத்தில் விசைப்படகு தலைகுப்புற கவிழ்ந்ததாகவும் காயத்துடன் மீட்கப்பட்ட மூன்று பேர் புங்குடு தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை ஏற்கனவே ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தற்போது விசைப்படகுகள் மோதி விபத்து ஏற்படுத்தியது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

ஒரு மாதத்திற்கும் மேல் குளிக்காத கணவர்.. திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கேட்ட மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments