இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரில் மூன்று போட்டிகளையும் வென்று இந்திய அணி தொடரை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 8 ரன்களுக்குள் சுருட்டி போட்டியை டிரா செய்த இந்திய அணி, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இதில் கடைசி இரண்டு ஓவர்களை ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் வீசியது கவனத்தை ஈர்த்தது. கேப்டனாக் சூர்யகுமார் யாதவ்வின் இந்த அணுகுமுறை பாராட்டுகளைப் பெற்றுள்ளது. போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர் “கடைசி 2 ஓவரைக் காட்டிலும் 48 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தபின்னரும் அனைவரும் நம்பிக்கையோடு ஆடினர். அதுதான் மகிழ்ச்சியான விஷயம்.
இந்த பிட்ச்சில் 140 ரன்கள் என்பதுதான் சராசரி ஸ்கோர். அதனால் அதுதான் எங்கள் இலக்காக இருந்தது. அப்போது நம்பிக்கையோடு விளையாடினால் நிச்சயம் வெல்வோம் எனக் கூறினேன். வீரர்கள் அனைவரும் சக வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நான் பேட்டிங் செய்ய செல்லும் போது அழுத்தத்தை உணர்கிறேன். எப்போதும் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.