இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் வெறும் 10 ரன்களும், அதனை அடுத்து சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.
இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ரிங்கு சிங் ஒரு ரன்னிலும், கேப்டன் சூர்யா குமார் யாதவ் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். சுப்மன் கில் மட்டும் ஓரளவு நிலை தாடி 39 ரன்களும், அதன் பின்னர் ரியான் பராக் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களும், எடுத்தனர்.
இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 137 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணியின் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும் நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே நடந்த இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.