இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் தலா 137 ரன்கள் எடுத்ததை எடுத்து சூப்பர் ஓவர் போடப்பட்டது என்பதும் இந்த சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
சுப்மன் கில் 39 ரன்கள், ரியான் பராக் 26 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து 138 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரரான மெண்டிஸ் 43 ரன்கள், பெராரே 46 ரன்கள் எடுத்த போதிலும் அதன் பின் விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து சூப்பர் ஓவர் போடப்பட்ட நிலையில் இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இந்திய அணியின் சூர்யா குமார் முதல் பந்திலேயே பவுண்ட்ரி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனை அடுத்து இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வென்றது.