Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடியார் வீட்டுக்கு அமைச்சர் திடீர் விசிட்! தலைநகர பிரச்சினையா? தலைவரே பிரச்சினையா?

எடப்பாடியார் வீட்டுக்கு அமைச்சர் திடீர் விசிட்! தலைநகர பிரச்சினையா? தலைவரே பிரச்சினையா?
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:22 IST)
அதிமுக செயற்குழு நடந்து முடிந்த நிலையில் அமைச்சர்கள் பலர் ஈபிஎஸ் – ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சென்று சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்து தீவிர விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுக அமைச்சர்கள், பிரபலங்கள் தனித்தனியாக சந்தித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கேபி முனுசாமி அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதுகுறித்து அமைச்சர்களிடம் கேட்டால் முதல்வர் வேட்பாளர் குறித்து 7ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்பது மட்டுமே பதிலாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை க்ரீன்வேஸில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென சந்தித்து பேசியுள்ளார். எஸ்.பி.வேலுமணி தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென முதல்வரை சந்தித்திருப்பது துணை தலைநகர விவகாரம் தொடர்பாகவா அல்லது 7ம் தேதி அறிவிக்கப்பட உள்ள முதல்வர் வேட்பாளர் குறித்ததா என்று அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த திடீர் சந்திப்பு குறித்த விவரங்களை அமைச்சர் வேலுமணி விரைவில் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னை தூக்கி வளர்த்த பெண்ணை தூக்கி வீசிய கொரில்லா! – ஸ்பெயினில் சோக சம்பவம்!