Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கம்பெனி தரக்கூடிய அதிசய பொருள்… துணி சோப்பு! – அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!

Advertiesment
கம்பெனி தரக்கூடிய அதிசய பொருள்… துணி சோப்பு! – அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:02 IST)
ஆன்லைன் விற்பனை தளம் ஒன்றில் செல்போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப்பு அனுப்பப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் வெளியே செல்லவே தயக்கம் காட்டி வரும் நிலையில் ஆன்லைன் தளங்களில் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக சில போலி நிறுவனங்களும் பொருட்கள் விற்பது போல ஏமாற்றும் மோசடி சம்பவங்களும் நடந்து வருகின்றன.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நவீன மாடல் மொபைல் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த பார்சலை ஆசையாக பிரித்து பார்த்தபோது அதில் சலவை சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து பணம் திரும்ப கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் சிலர் கூறும்போது பொருட்களுக்கு ஆன்லைனில் ஸ்டார் ரேட்டிங் இருப்பது போல பொருட்களை விற்கும் முகவர்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் இருக்கும். அதை சோதித்து பொருட்களை வாங்கினால் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் தவிர்க்கலாம் என்று கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பதுதான் எதிர்கட்சியா? – பிரதமர் மோடி கண்டனம்!