Publish Date: Tue, 29 Sep 2020 (13:35 IST)
Updated Date: Tue, 29 Sep 2020 (13:37 IST)
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், சேலம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Prasanth Karthick
Publish Date: Tue, 29 Sep 2020 (13:35 IST)
Updated Date: Tue, 29 Sep 2020 (13:37 IST)