கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்ய ஒரு வியாபாரிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, ஆறு காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	நேற்று சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, லாட்டரி சீட்டு விற்பனை செய்ய காவல்துறையினருக்கு பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
	 
	அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், கடலூர் காவல்துறையில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் , ஒரு தலைமைக் காவலர் மற்றும் நான்கு காவலர்கள் என மொத்தம் ஆறு பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
	 
	சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.