செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
, புதன், 10 ஜூலை 2024 (13:39 IST)
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.
அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று ஜூலை 12ஆம் தேதிக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் செந்தில்பாலாஜி தரப்பு இதுகுறித்து கூறியபோது, இன்னும் எத்தனை நாட்கள் தான், ஒத்திவைக்க கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்று கூறியுள்ளன்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகி உள்ள நிலையில் அவரது ஜாமின் மனு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் இருந்து கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து ஜூலை 12-ம் தேதி ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி இந்த வழக்கை காலதாமதம் செய்யும் வகையில் மூன்று புதிய மனுக்களை தாக்கல் செய்தார் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது அவரது ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்