முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுக்கள் ஜூலை எட்டாம் தேதி விசாரணை செய்யப்படும் என்று சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பண பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீது அடுத்தடுத்து வழக்குகள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்குகளில் புதிதாக ஆவணங்களை கேட்டும் சில விளக்கங்கள் கேட்டும் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து மீண்டும் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுக்கள் ஜூலை எட்டாம் தேதி விசாரணை செய்யப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பை எதிர்நோக்கி கொண்டிருக்கும் நிலையில் திடீரென மூன்று மனுக்கள் புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.