நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் என்று பதிவு செய்திருந்தார்.
ஆனால், தீபத் திருநாள் முடிந்தவுடன் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். இது சமூக வலைதளங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் மீண்டும் அதே வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார்.
புதிய பதிவில் அவர், "அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருவிழா நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். முந்தைய பதிவில் 'கார்த்திகை' என்ற வார்த்தை இல்லாத நிலையில், புதிய பதிவில் அந்த வார்த்தை இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பதிவில், "தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாழ்த்துப் பதிவில், செங்கோட்டையன் அவர்கள் நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்திய புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டு, பின்னர் வார்த்தை மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்ட விவகாரம், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.