தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த பல தேர்தலாகவே தேசிய கட்சியான காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அதேநேரம் இதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு திமுக தரப்பில் அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் வெறும் எம்எல்ஏக்களாக மட்டுமே இருக்கிறார்கள். அதாவது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரசுக்கு திமுக பங்கு கொடுப்பதில்லை.. ஆனால் எங்களுக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல் காங்கிரஸில் ஒலிக்க துவங்கியிருக்கிறது.
பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட பலரும் இந்த கருத்தை வலியுறுத்தினார்கள். ஆனால் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்பதில்லை என்பதில் திமுக பிடிவாதமாக இருக்கிறது.. ஒருபக்கம் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து காங்கிரஸ் பிரமுகர்கள் பேசி வருகிறார்கள்.. காங்கிரஸ் வியூக வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கூட சில நாட்களுக்கு முன்பு விஜயை சந்தித்து பேசினார்.
ஒருபக்கம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக கருத்தை தெரிவித்தார். எனவே, காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறதா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில், தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என விஜய் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளரக்ளிடம் பேசிய விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் காங்கிரஸ் எப்படிப்பட்ட தேசிய கட்சி.. ஆனால் ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தன்னுடைய முகத்தை இழந்துவிட்டது. கட்சியே தேய்ந்துபோய்விட்டது. விஜய் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்.. அதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. அப்போதுதான் காங்கிரஸ் பழைய நிலைக்கு வரும்.. தமிழ்நாடை 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளே ஆண்டு வருகிறது. காங்கிரஸ் இதை மாற்ற விரும்பினால் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஏற்கனவே நாங்கள் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை குடித்து வருகிறோம்.. எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுக்கும் பூஸ்ட் எங்களுக்கு வேண்டாம்.. எங்கள் தலைவர் ராகுல் காந்தி எங்களுக்கு நிறைய பூஸ்ட் கொடுத்திருக்கிறார்.. இருந்தாலும் இந்த பூஸ்டை கொடுத்ததற்கு நன்றி எனக் கூறியிருக்கிறார்.