நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.. அதேநேரம் அவர் இன்னமும் முழு அரசியல்வாதியாக மாறவில்லை.. பல விஷயங்களுக்கும் அவர் வாய் திறந்து பேசுவதில்லை.. அவரின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு குடைச்சல் கொடுத்து வருகிறது, சிபிஐ விசாரணை தொடர்பாக இரண்டு முறை டெல்லிக்கு போனார், இதுபற்றியெல்லாம் அவர் பேசுவதில்லை என பலரும் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், அவரோ அமைதியாக இருக்கிறார்.
இந்நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது 41 பேர் உயிரிழந்தாங்களே.. அவங்களை பார்க்க ஏன் விஜய் நேர்ல பார்க்கல?. முதலில் அவரை வீட்டை விட்டு வெளியே வர சொல்லுங்க.. நான் அரசியலில் 17 வருஷமா இருக்கேன்.. அரசியல்ல எனக்கு 28 வருஷ அனுபவம் இருக்கு..
பாராளுமன்றத்தில் இருந்திருக்கேன்.. சட்டமன்றத்தில் இருந்திருக்கேன்.. என்கூடவெல்லாம் விஜயை ஒப்பிடாதீங்க.. கூட்டம் எல்லாருக்கும்தான் வரும்.. வடிவேலுக்கு கூடதான் கூட்டம் கூடும்.. நாளைக்கு அஜித் பேசினாலும் இதே கூட்டம் வரும்.. என் கூட விஜயை ஒப்பிடாதீங்க.. விஜய்க்கு கூட்டம் கூடும் ஆனா மக்கள் வாக்களிப்பாங்களான்னுதான் பார்க்கணும் என ஆவேசமாக பேசியிருக்கிறார்.