Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி போல் பக்தர்களுக்கு தங்கும் விடுதி: மதுரையில் அமைக்க திட்டம்!

Advertiesment
meenakshi
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:27 IST)
திருப்பதியில் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படும் என தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 25 கோடி செலவில் தங்கும் வசதியுடன் கூடிய அறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளனர்
 
இந்த தங்கும் விடுதிகளில் 307 அறைகள் இருக்கும் என்றும் வைஃபை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இருக்கும் என்றும் இந்த தங்கும் விடுதி இந்த ஆண்டு முடிவதற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 367, டீசல் ரூ. 327