Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 367, டீசல் ரூ. 327

Advertiesment
Karunai Kilangu
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:12 IST)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது.


இதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட் ரோல், டீசல் விலை உயர்வும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இலங்கை ஐஓசி அறிவித்துள்ள புதிய விலைப் பட்டியலின்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 35, டீசல் ரூ. 75ம் என விலை உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் (92 ஒக்டோன்) ரூ. 338, 95 ஒக்டோன் ரூ. 367, யூரோ ரூ. 347க்கும் விற்பனையாகிறது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 289, சூப்பர் டீசல் ரூ. 327க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரிழந்த விளையாட்டு வீரர் குடும்பத்திற்கு நிவாரணம்! – முதல்வர் அறிவிப்பு!