Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாருடனும் கூட்டணி இல்லை.. திருமா, வைகோ, விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்: சீமான்

Advertiesment
சீமான்

Siva

, திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (16:32 IST)
சென்னை நிருபர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
 
"நான் தோற்கிறேன் என்று சொல்லாதீர்கள்; இது வளர்ச்சியின் எழுச்சி. நாம் தமிழர் கட்சி 1.2% வாக்குகளிலிருந்து 8.2% ஆக வளர்ந்துள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு சாதனையாகும். மற்ற கட்சிகள் இந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டவில்லை.  நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் தங்கள் வாக்கு சதவீதம் குறையாது.  
 
"செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டியிடுவோம். எனது வெற்றி, தோல்வி இரண்டையும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நான் மக்களுக்கானவன்,  என்னைப்போல் மற்ற தலைவர்கள் எஜமானர்களுக்குப் பயப்படாமல் பேச முடியுமா?
 
மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்ற தலைவர்கள் செய்த கூட்டணி அரசியல் என்ற தவறுகளை நான் செய்ய மாட்டேன். என்னை சிறையில் அடைத்து, அவதூறு பரப்பி, என்.ஐ.ஏ. ரெய்டு நடத்திப் பார்த்தாலும், தாம் எதற்கும் கலங்கவில்லை என்றும் அவர் கூறினார். "தனித்து நின்று தனித்துவத்தை இழக்கக் கூடாது" என்ற அவரது கொள்கை, தொடர்ந்து தனித்து போட்டியிடுவதற்கான அவரது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
 
தமது அரசியல் பயணத்தை ஒரு சவாலாக குறிப்பிட்ட அவர், "கடலையே கடந்துவிட்டேன், இன்னும் கரைதான் இருக்கிறது" என்று உருவகப்படுத்தி பேசினார். 36 லட்சம் வாக்குகளைப் பெற்றவர் மேலும் பல வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அவரிடம் இருப்பதாக தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்: முழு விவரங்கள்..!