பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டு போடலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் அந்தந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்கலாம் என்ற வகையில் தேர்தல் ஆணையம் செய்து வரும் மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
முக்கியமாக தமிழ்நாட்டில் இந்தி வாக்காளர்களை அதிகரித்து பாஜகவிற்கு ஓட்டு வங்கியை பலப்படுத்தும் முயற்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவருமே பாஜகவின் வாக்குகள்தான். கோவை தெற்கு பகுதிகளிலும், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் வட இந்தியர்கள் அதிகமாக உள்ளதால் தேர்தலில் அவர்கள் வாக்களித்தால் பாஜக வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது.
தமிழ்நாட்டை இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக் மாற்ற முயற்சிகள் நடக்கிறது. வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தரக்கூடாது. நான் இருக்கும் வரை அப்படி ஒன்றை நடக்க விடவும் மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K