நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை "மைக் புலிகேசி" என திருச்சி டிஐஜி வருண்குமார் கிண்டல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு எதிராக சில வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு ஒரு வழக்கில் ஆஜராக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி அருண்குமார் வருகை தந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, சீமானை மறைமுகமாக கிண்டல் செய்து விமர்சித்தார். "நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால், வழக்கை பற்றி எதையும் பேச விரும்பவில்லை," என்று கூறிய அவர், "வழக்கை வாபஸ் வாங்கமாட்டேன்" என்றும் தெரிவித்தார்.
மேலும், "நான் என் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன்" என்ற புரளியை பரப்புகிறார்கள் என்றும், "இவ்வாறு பேசுபவர்கள் கேவலமான எண்ணம் கொண்ட மனிதர்கள்" என்றும் அவர் தெரிவித்தார். "மைக் புலிகேசியன் தரம் அவ்வளவுதான்," என்று கூறிய அவரது பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.