ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட ஒரே அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்தது. ஆனால், அந்தக் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,15,079 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 24151 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனை அடுத்து, அவர் உள்பட அந்த தொகுதியில் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவிகேஸ் இளங்கோவன் 110,156 வாக்குகள் பெற்றிருந்தார். இருந்த நிலையில், சந்திரகுமார் 115709 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால், 5,000 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளார்.
2023ஆம் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923வாக்குகள் பெற்ற நிலையில், அதே தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால், தற்போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 24151 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில், அதிமுக மற்றும் பாஜகவினர் சிலர் மட்டுமே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்திருக்கலாம். மற்றவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பது இந்த தேர்தல் முடிவிலிருந்து தெரிகிறது.