பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. பத்து நாட்களில் உலகளவில் சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் படம் பார்த்துள்ள இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் “இந்த படம் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாது. ரொம்ப நல்லா இருக்கு. அவரது படைப்பில் உள்ள நேர்மையால் மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். சரியான நேரத்தில் சரியான படைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்தைப் பார்த்து நான் வியந்துவிட்டேன். நான் சின்ன வயசில் பரோட்டாவுக்குப் பந்தயம் கட்டி கபடி விளையாடும்போது எங்க அப்பா அரிவாள எடுத்துட்டு ஓடி வருவாரு. எனக்கு அதுலாம் நியாபகம் வந்துடுச்சு” என சிலாகித்துள்ளார்.