Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமான் ஒரு கிணற்று தவளை: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்..!

Advertiesment
சீமான்

Siva

, புதன், 16 ஜூலை 2025 (16:09 IST)
மக்களின் பிரச்சனைக்காக தான் மட்டுமே போராடுவதாகவும், மற்றவர்கள் போராடுவதில்லை என்றும் கிணற்று தவளையான சீமான் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் அவ்வளவுதான் என்று கருதிக்கொள்ளுமாம். அதுபோல்தான் சீமான் என்னும் தவளை தன்னை தவிர தமிழகத்தில் யாருமே போராடுவதில்லை என்று பிதற்றிக்கொண்டிருக்கிறது. ரிதன்யாவுக்காக மாதர் சங்கம் எழுப்பிய குரல் கிணற்றுக்குள் இருந்த சீமான் தவளைக்கு கேட்காமல் போயிருக்கலாம். 
 
அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாதர் சங்கங்கள், பெண்ணுரிமைவாதிகள் என யாரும் பேசவில்லை என்று சீமான் கூறியதற்குதான் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்" என்பது குறிப்பிடத்தக்கது.
 
சீமானை ஒரு கிணற்றுத் தவளை என சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் நிலையில், இதற்கு சீமான் தரப்பிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்லா காரை ஓட்டி பார்த்த துணை முதல்வர்.. ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ வைரல்..!