Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன் கட்சிக்காரன் அசிங்கமா பேசினப்ப நீ எங்க இருந்த?!.. விஜயை விளாசிய சீமான்!..

Advertiesment
seeman
விஜய் எப்போது கட்சி தொடங்கினாரோ அப்போது முதலே விஜயின் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும், தவெக ட்சியினரும் சமூக வலைதளங்களில் தவெகவையும், விஜயையும் விமர்சிப்பவர்களை மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். இதையெல்லாம் விஜய் கண்டு கொள்வதே இல்லை..

அவ்வளவு ஏன்? விஜய்க்கு எதிராக அவரின் மனைவி விவாகரத்து தொடர்ந்தபோது அவரையே மிக மோசமாக தவெக ஆதரவாளர்கள் விமர்சித்தார்கள். அதையெல்லாம் பார்த்துக் கொண்டு விஜய் அமைதியாகவே இருந்தார். அதேபோல் தவெகவையும், விஜயையும்விமர்சிக்கும் மற்ற கட்சியை சேர்ந்த பெண்களை விஜயின் விர்ச்சுவல் வாரியர்ஸ் என்கிற பெயரில் இருக்கும் தவெகவினர் மிகவும் கீழ்த்தரமாக பேசி வருகிறார்கள்.. இதையும் விஜய் கண்டு கொள்வதும் இல்லை.. அவர்களை கண்டிப்பதும் இல்லை..

அதேநேரம் சமீபத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் விஜய்க்கு ஆதரவாக பேசிய சில பெண்கள் பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்ததோடு டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து பொன்ராஜ் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது..

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தவெந்க கட்சியை சேர்ந்தவர்கள் என்னை, என் குடும்பத்தை, தம்பி சிவகார்த்திகேயன் குடும்பத்தை, தம்பி அஜித்குமார் குடும்பத்தை பற்றி இழிவாக பேசியதை வைத்து ஒரு புத்தககமே போடலாம்.. அப்போதெல்லாம் விஜய் எங்கே இருந்தார்?.. அதையெல்லாம் கண்டித்து இனிமேல் இதுபோல் செய்யக்கூடாது என்று ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்..

உங்கள் கட்சியை சேர்ந்த பெண்கள் எல்லை மீறி பேசும் போது அதையும் கண்டித்து அவர்களிடம் சொல்லி இருந்தால் இன்று நீங்கள் பொன்ராஜ் மீது புகார் கொடுக்க காவல்துறை அலுவலகம் சென்றதற்கு தகுதியும், நேர்மையையும் இருந்திருக்கும்.. ஆனால் நீங்கள் செய்யவில்லையே.. என்னைப் பற்றி பேசியதற்கு நான் விஜய் மீது புகார் கொடுக்கவா?’ என சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பேசுற இடத்தில் திடீர் பள்ளம் எப்படி வந்துச்சு?!.. வெட்கமா இல்லையா?.. பொங்கிய விஜய்...