Publish Date: Tue, 06 Apr 2021 (07:49 IST)
Updated Date: Tue, 06 Apr 2021 (08:05 IST)
சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவருக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும் என அமமுக வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வசித்துவந்தார். அதனால் அவருக்கு வாக்கு அங்கேயே அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின் அந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டதால் சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர் அந்த பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
சிறை தண்டனை பெற்று அவர் வெளியே வந்தும் தேர்தல் ஆணையத்தில் பேர் சேர்க்க சொல்லி விண்ணப்பித்தும் அவர் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அமமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர், ஆவின் வைத்தியநாதன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சசிகலாவுக்கு தபால் ஓட்டு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.