Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கும் எடப்பாடியார்; சுற்றுபயணம் செல்லும் சசிக்கலா? – அரசியலில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (08:56 IST)
அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா தன்னை குறிப்பிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக தொண்டர்களை சந்திக்க அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சசிக்கலா மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் சசிக்கலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடர் சம்பவங்களால் அதிமுக தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

நான் ஒரு ஏழைத் தந்தையின் மகன்.. விதவிதமாக உருட்டிய எலான் மஸ்க்! - வீடியோவில் வெளியான குட்டு!

பாலாற்றில் கழிவு நீர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: அன்புமணி கோரிக்கை..!

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments