சசிக்கலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என கூறிக் கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி காரச்சார பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் அதிமுகவின் பொன்விழா தொடக்க நிகழ்வு நடந்த நிலையில் சென்னையில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிக்கலா, அங்கு அதிமுக பொதுச்செயலாளர் என்றே தனக்கு கல்வெட்டு வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று ஆளுனரை சந்திக்க சென்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பேசியபோது “சசிக்கலா தற்போது அதிமுக கட்சியிலேயே இல்லை. கட்சியில் இல்லாத ஒருவரை நினைத்து நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். நாங்கள்தான் உண்மையான அதிமுக கட்சி என தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.