Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!

Advertiesment
புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:20 IST)
தொண்டர்களுக்கு சசிகலா டாக்டர் நமது எம் ஜி ஆர் நாளேடு மூலமாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘நிறை அன்புடைய சகோதர.. சகோதரிகளே! கழகத்தின் பேரன்புத் தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம்’ என்று தொடங்குகிறது அந்த கடிதம். தொடர்ந்து, “இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம்.

அண்ணா கண்ட வழியில்..., புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம்.

புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?, மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அஇஅதிமுக நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள், காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம்.

ஒன்றுபடுவோம்...
வென்று காட்டுவோம்..
தலைவர் புகழ் ஓங்கட்டும்...
தலைவி புகழ் நிலைக்கட்டும்...’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஸ்மிஸ் செய்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்து கொண்ட ஜொமைட்டா!