சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... டிப்டாப்பாய் சிறையில் போஸ் கொடுக்கும் சசி!

திங்கள், 4 நவம்பர் 2019 (13:43 IST)
பெங்களூரு சிறையில் சிறை தண்டனை அனுபவித்து அரும் சசிகலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்.  
 
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யும் என கூறப்பட்டது.  
ஆனால், தற்போது கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.  
 
சமீபத்தில் சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றது, சிறையில் தனியாக சமைத்தது, 5 செல்களை பயன்படுத்தி வந்தது அனைத்தும் உண்மை என தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்போது சசிகலாவுக்கு விதிமுறைகள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது சசிகலா தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
இந்நிலையில் தற்போது சுடிதார் அணிந்து சிறை வளாகத்தில் சசிகலா போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் எப்படி லீக் ஆனாது, யார் எடுத்தது என தெரியாத நிலையில், இது சசிகலாவிற்கு மேலும் சிக்கலை உண்டாக்க கூடும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ட்வீட்