Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குளத்துக்கு செல்லும் அத்திவரதர்: புலம்பி தள்ளிய 'நேர் கொண்ட பார்வை' நடிகர்!

Advertiesment
குளத்துக்கு செல்லும் அத்திவரதர்: புலம்பி தள்ளிய 'நேர் கொண்ட பார்வை' நடிகர்!
, திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (19:18 IST)
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்தி வரதர் கடந்த ஜூன் மாதம் முதல் காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் இம்மாதம் 17ஆம் தேதி மீண்டும் குளத்திற்கு செல்லவுள்ளார். அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது என்று ஒருசிலர் கூறினாலும், ஆகம விதிப்படி அத்திவரதர் 17ஆம் தேதி குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரும், 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் மாறிய ரங்கராஜ் பாண்டே, அத்திவரதர் மீண்டும் குளத்திற்கு செல்லவுள்ளது குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
40 ஆண்டுக்குப் பிறகு வந்த மாமணி... 500 ஆண்டுக்கு முன்  நீர் தொட்ட நிமலன்... 1500 ஆண்டுகளுக்கும் மேல் அருள்பாலிக்கும் அத்தி வரதன்... மீண்டும் அனந்த சரஸ் குளம் ஏகுவதா...? கண்கள் குளமாகிறது... நான் உன்னை பார்த்துவிட்டேன்... நாடு பார்க்க வேண்டாமா...? வரதா... வரம் தா...!
 
ரங்கராஜ் பாண்டேவின் இந்த கருத்துக்கு டுவிட்ட பயனாளிகள் ஆதரவு மற்றும் கிண்டலுடன் கூடிய எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி தண்ணீர் கடலில்தான் கலக்கப் போகிறது – வைகோ ஆதங்கம்