சிம்புவின் திருமணம் அத்திவரதர் கையில் தான் உள்ளது: டி.ராஜேந்தர்

ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (07:13 IST)
நடிகர் சிம்புவுக்கு தற்போது 36 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. ஓரிரண்டு காதல் தோல்விக்கு பின் அவர் திருமணமே வேண்டாம் என இமயமலை நோக்கி சென்றிருந்த நிலையில் தற்போது அவரது பெற்றோர்கள் அவர் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் - உஷா தம்பதியினர் சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளனர். விரைவில் அவருக்கேற்ற பெண் கிடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்திற்கு அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'சிம்புவுக்கு  திருமணம் நடக்க வேண்டும் என்று அத்திவரதரிடம் வேண்டினேன். என் மகனுக்கு சாதாரண பெண் வேண்டுமென்றால் எங்கு வேண்டுமானாலும் தேடலாம்.ஆனால் என் மகனுக்கு தகுந்த, குணத்தில் பொருந்திய பொருத்தமான பெண் வேண்டுமானால் அது அத்திவரதரால் தான் முடியும் அதனால் அவரிடம் வேண்டினேன். அத்திவரதர் அருளால் விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.
 
சிம்புவின் தம்பிக்கும் தங்கைக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் சிம்புவின் திருமணம் எப்போது நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம். சிம்பு ஏற்கனவே இரண்டு பிரபல நடிகைகளை காதலித்து பின்னர் பிரேக்-அப் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிக்பாஸ் இந்த வாரம் வெளியேறுகிறார் சாக்சி: கவினுக்கு திண்டாட்டமா? கொண்டாட்டமா?