Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறுப்பில்லாம நடந்துக்குறாங்க..முழுசா ஒரு ஊரடங்கு போட்டு விடுங்க! – ராமதாஸ் வலியுறுத்தல்!

Advertiesment
பொறுப்பில்லாம நடந்துக்குறாங்க..முழுசா ஒரு ஊரடங்கு போட்டு விடுங்க! – ராமதாஸ் வலியுறுத்தல்!
, சனி, 21 மார்ச் 2020 (13:09 IST)
பிரபல பாடகி கொரோனா தொற்று இருப்பதை மறைத்து அரசியல் தலைவர்களுக்கு விருந்து அளித்ததை குறிப்பிட்டு முழு ஊரடங்கு அமல்படுத்த ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மும்பையில் உள்ள பிரபல பாடகி கனிகா கபூர் தனக்கு கொரோனா இருப்பதை மறைத்து அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட விருந்தில் கலந்து கொண்டார். அதனால் தற்போது அந்த விருந்தில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உண்மையை மறைத்ததற்காக கனிகா கபூர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி அளித்த விருந்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங், அதன்பின் நாடாளுமன்ற கூட்டத்திலும், குடியரசுத் தலைவர் மாளிகை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் முதல் எம்.பி,க்கள் வரை அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் தான் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் ஆகும். இவற்றைத் தடுப்பதற்காகத் தான் அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை செயல்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது!” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புக்கு படிங்க.. படம் பாருங்க.. நிம்மதியா இருங்க! – கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ