Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமி பாலியல் வன்கொடுமை: மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரன்!

Advertiesment
சிறுமி பாலியல் வன்கொடுமை: மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரன்!
, சனி, 21 மார்ச் 2020 (11:56 IST)
சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மாடியிலிருந்து வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது பத்து வயது குழந்தை அருகிலுள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சிறுமி காணாமல் போன நிலையில் அக்கம்பக்கத்தினரோடு சீனிவாசன் தேடி வந்துள்ளார்.

அப்போது குடியிருப்புக்கு அருகே உள்ள தென்னை மரத்தின் அருகே சிறுமி அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸுக்கு தகவ்ல் அளித்துள்ளனர். போலீஸார் சிறுமியின் சடலத்தை பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது சுரேஷ் என்பவர் மேல் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை கைது செய்து விசாரித்ததில் சிறுமியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சுரேஷ். சிறுமி அலறவே வெளியே சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் 3வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அதே நாளில் சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடுமைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரே அடங்குனாலும் அம்மா உணவகத்துக்கு நோ ரெஸ்ட்!!