Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிகிட்ட மட்டும்தான் இ-பாஸ் கேப்பீங்களா? – ட்ரெண்டான #இபாஸ்_எங்க_உதய்

Advertiesment
ரஜினிகிட்ட மட்டும்தான் இ-பாஸ் கேப்பீங்களா? – ட்ரெண்டான #இபாஸ்_எங்க_உதய்
, வெள்ளி, 24 ஜூலை 2020 (11:07 IST)
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டிற்கு சென்ற போது இ-பாஸ் வாங்கினாரா என்ற சர்ச்சை கிளம்பிய நிலையில், தற்போது மீண்டும் உதயநிதியின் இ-பாஸ் விவகாரம் கிளம்பியுள்ளது.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த தந்து லமோர்கினி காரில் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று வந்தது ட்ரெண்டானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்றுதான் சென்றாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநகராட்டி அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ரஜினி பெயரில் எடுத்த இ-பாஸ் வெளியானது. ஆனால் அதில் நேற்றைய தினம் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மேலும் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் திமுக ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் குறித்து விமர்சித்ததாக தெரிகிறது. இதனால் சமூக வலைதளத்தில் களமிறங்கியுள்ள ரஜினிகாந்த் ஆதரவாளர்கள் ‘ரஜினியாவது இ-பாஸ் காட்டினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் செல்வதற்கு இ-பாஸ் பெற்றாரா? அப்படியானால் அதை காட்டாதது ஏன்?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலினும் இ-பாஸ் காட்ட வேண்டும் என வலியுறுத்தி இணையத்தில் ரஜினிகிட்ட மட்டும்தான் இ-பாஸ் கேப்பீங்களா? – ட்ரெண்டான #இபாஸ்_எங்க_உதய் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையை போராடி மீட்ட தாய்: பெரியப்பாவே கடத்த முயன்றது அம்பலம்!