Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்ட ஆசாமிகள்! – ஓபிஎஸ் சீற்றம்!

Advertiesment
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்ட ஆசாமிகள்! – ஓபிஎஸ் சீற்றம்!
, வெள்ளி, 24 ஜூலை 2020 (08:24 IST)
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சிலைகள் உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சிலர் காவித்துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தொண்டர்கள் பலர் சமூக வலைதளங்களில் பாஜக – அதிமுகவை இணைத்து பேசி வந்ததும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும் “தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு இந்தியர்களை மீட்க உதவிய ஏர்-இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா