Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்! – மருத்துவ காரணங்கள் என தகவல்!

Advertiesment
இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்! – மருத்துவ காரணங்கள் என தகவல்!
, வியாழன், 23 ஜூலை 2020 (15:45 IST)
சில தினங்களுக்கு முன்பு தனது பண்ணைக்கு வீட்டுக்கு சென்ற ரஜினி இ-பாஸ் எடுத்தாரா என்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் இன்று இ-பாஸ் எடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ரஜினி தனது லம்போகினி காரை தானே ஓட்டி சென்றது ட்ரெண்டானது. இந்நிலையில் அவர் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் எடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது. ரஜினி இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினி. இதற்காக முறையாக அவர் இ-பாஸ் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸ் அவர் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இ-பாஸ் வில்லங்கம்: காவல் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பாரா ரஜினி?