Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

Advertiesment
ரஜினிகாந்த்

Mahendran

, சனி, 26 ஏப்ரல் 2025 (09:13 IST)
பஹல்காம் தாக்குதலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்  இந்த சம்பவம் தீவிரவாதிகள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து  நடிகர் ரஜினிகாந்த்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனைக் கெடுக்கனும் இப்படி செய்கிறார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அதன் பின்னால் இருப்பவர்களையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த மாதிரி மறுபடி செய்யனும் என்று அவர்கள் இனி கனவில் கூட நினைக்கக்கூடாது என்று கூறினார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்குள் இந்த 3 பேரும் நுழையக்கூடாது: காவல் ஆணையா் அருண் அதிரடி உத்தரவு..!