Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’சுர்ஜித் உயிருடன் மீண்டும் வர இறைவனிடம் வேண்டுகிறேன் ... நடிகர் ரஜினி

Advertiesment
’சுர்ஜித் உயிருடன் மீண்டும் வர இறைவனிடம் வேண்டுகிறேன் ... நடிகர் ரஜினி
, ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (11:14 IST)
திருச்சி அருகே , நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 25 ஆம்தேதி மலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை (சுர்ஜித் ) மீட்க அரசு மற்றும் அரசு அதிகாரிகள் தொடந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று   சூப்பர் ஸ்டார் ரஜினி தனது போயஸ் கார்டன் இல்லத்தில், சுர்ஜித் உயிருடன் மீண்டும் வர பிராத்திக்கிறேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  அன்று முதல்  தமிழக அரசு, தன்னார்வலர்கள் மீட்புக்குழுவினர் , தீயணைப்புப்படையினர் என பல்வேறு தரப்பினர் குழந்தை மீட்கும் பணியில் ஈட்டுபட்டுள்ளனர். 
 
குழந்தை கிணற்றில் சிக்கி 40 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் தொடர்ந்து ஆக்‌ஷிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.
 
தற்போது வரை, ஒ.என்.ஜி.சி.நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ரிக் மெஷினால் 30அடி ஆழத்திற்கு குழு தோண்டப்பட்டுள்ளது.
 
ஆழத்தில் செல்லச் செல்ல கடினமான பாறைகள் உள்ளதால் மீட்பில் தொய் காணப்படுகிறது. 
 
இந்த ஒ.என்.ஜி.சியின்  ரிக் மெசினால் ஒரு மணி நேரத்தில் 100 அடி தோண்டிவிட முடியுமென்பதால், குழிதோண்டிய பின், சிறுவர் இருக்கிற இடத்திலிருந்து 2 அடி தூரத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பக்கவாட்டில் இருந்து கையால் மண்ணைத் தோண்டி குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபாவளி தினத்தை முன்னிட்டு  தனது போயஸ் கார்டன் இல்லத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
அதில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள், குழந்தையை (சுர்ஜித் ) மீட்க அரசு மற்றும் அரசு அதிகாரிகள் தொடந்து முயற்சித்து வருகின்றனர்.
 
ஆழ்துளை கிணறுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்களும் கவனமுடன் இருக்கவேண்ண்டும். சுர்ஜித் உயிருடன் மீண்டும் வர வேண்டுமென இறைவனை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின்  மக்களின் முக்கிய பிராத்தனையாக உள்ளது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சுர்ஜித்தை' மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் - கமல்ஹாசன் ’டுவீட்’