திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. நேற்று முதல் அக்குழந்தை மீட்க பலரும் போராடி வரும் நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மக்களும் பேரிடர் மீட்பு குழுவினரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது.
25 மணிநேரமான குழந்தை கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதால், அதற்கு அருகிலேயே, 90 அடி ஆழத்திற்கு இன்னொரு குழி தோண்டி அதில் மூன்று வீரர்கள் இறங்கி, பக்கவாட்டின் வழியே குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர்.
அதேநேரம், சுர்ஜித்துக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மனைவி கூறியிருப்பதாவது :
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை மீட்க நம்மிட போதிய தொழில்நுட்பம் இல்லை.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை மீட்க நம்மிடம் போதிய தொழில்நுட்பம் இல்லை.
குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறதா என தெரியவில்லை.
விண்வெளியி மற்றும் பலதுறைகளில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகள இன்னும் மீட்க முடியவில்லை.
குழந்தைகள் நலனுக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.