Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சுர்ஜித்தை' மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் - கமல்ஹாசன் ’டுவீட்’

'சுர்ஜித்தை'  மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் - கமல்ஹாசன் ’டுவீட்’
, ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (10:15 IST)
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  அன்று முதல்  தமிழக அரசு, தன்னார்வலர்கள் மீட்புக்குழுவினர் , தீயணைப்புப்படையினர் என பல்வேறு தரப்பினர் குழந்தை மீட்கும் பணியில் ஈட்டுட்டுள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆழ்துளை கிணற்றில் சிறுவனை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. எனவே தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது. 
 
குழந்தை சுர்ஜித் கிணற்றில் விழுந்து 40  மணிநேரமாகிவிட்டது. அவரை  மீட்கும் பணி முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வரிகிறது.
 
குழந்தை கிணற்றுக்குள் 100 அடிக்கு கீழே சிக்கிக் கொண்டிருப்பதால், அதற்கு அருகிலேயே,  இன்னொரு குழி தோண்டி அதில் மூன்று தீயணைப்பு வீரர்கள் இறங்கி, பக்கவாட்டின் வழியே குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர். 
 
ஆனால், 27 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் அதிக அளவு இருந்ததால் குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் ஒ.என்.ஜி.சி.நிறுவனத்திலிருந்து ரிக் மெஷின் கொண்டுவரப்பட்டு தற்போது குழந்தையை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மக்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதுதான்.
 
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
 
’ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. 
 
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். 
 
ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவன் சுர்ஜித் : துளையிடும் இடத்தில் பாறைகள் இருப்பதால் மீட்பில் தொய்வு