Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியை எதிர்க்க ஒரு கூட்டம் உள்ளது - தமிழருவி மணியன் பேச்சு ! சீமானின் ரியாக்‌ஷன் என்ன ?

Advertiesment
ரஜினியை எதிர்க்க ஒரு கூட்டம் உள்ளது - தமிழருவி மணியன் பேச்சு  ! சீமானின் ரியாக்‌ஷன் என்ன ?
, சனி, 21 டிசம்பர் 2019 (16:17 IST)
ரஜினி எதை சொன்னாலும் அதை எதிர்ப்பதற்கு என ஒரு கூட்டம் உள்ளது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் ஆன்மீக அரசியல் என்று  தன் அரசியல் வருகையை  வெளிப்படுத்தி இரண்டு வருடம் ஆகிவிட்டது.
 
இந்நிலையில் ரஜினி சினிமாவில்  பிசியாகி, பேட்ட, தர்பார், என வரிசையாக நடித்து வருகிறார். சமீபத்தில் தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது கூட, நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து, சீமானை மறைமுகமாக சாடினார்.
 
ரஜினி மீது தனிப்பட்ட பகை இல்லை என்றாலும்  அரசியல் என்று வருகிறபோது சீமான்,  ரஜினி ஒரு சீனியர் நடிகர் -  சூப்பர் ஸ்டார் என்று கூட பார்க்காமல் காரசாரமாக  வசைபாடுகிறார். அவர் மீது விமர்சனங்களை வாரி எறிகிறார். இதற்கு எல்லாம் சேர்த்துதான் அன்று, ரஜினி ரசிகரான நடிகர்  லாரன்ஸ், சீமானுக்கு தக்க  பதிலடி கொடுத்து, தனிப்பட்ட முறையில் எதையும் பேச வேண்டாம், கொள்கை ரீதியாக பேசுங்கள் என தெளிவாக பேசி தன் உள்ளத்தில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டார். அவர் பேசியதை மீடியாவும் பகிரங்கமாக வெளியிட்டனர்.
webdunia
ரஜினிக்கு ஆளும் கட்சியான அதிமுகவிலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியிலும் பல்வேறு எதிர்புகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிச் சென்ற கராத்தே தியாகராஜன் ரஜினிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
 
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுடன் இணைந்து செயல்பட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்தும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார். அதனால் ரஜினி, கமல் ரசிகர்கள் இருவரும் அரசியலில்  இணைவுள்ளதை நினைத்து பெருமைப்படுகின்றனர். அடுத்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் நல்ல மாற்றம் வரப்போகிறது என சமூக வலைதளங்களிலும் இரு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அதேசமயம் ஆரம்பத்தில் தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போச்சு என்று ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக அமைச்சர்கள், தற்போது சிலரை தவிர மற்றவர்கள் ரஜினியை விமர்சித்து வருகின்றனர்
 
அதில், அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி உள்பட சிலர்  தாங்கள் ரஜினியின் ரசிகர்கள் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கின்ற போது, ரஜினி என்ற ஆளுமைக்கும் அவரது இமேஜிக்கும் அரசியல் மவுசு அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.
 
இந்நிலையில், இன்று தமிழருவி மணியன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ரஜினி ’எதைச் சொன்னாலும்  அதை எதிர்ப்பதற்கு என்றே  ஒரு கூட்டம் உள்ளது; ரஜினி வன்முறைக்கு இடமில்லாமல் அமைதியாக போராடுங்கள் என்றே சொன்னார்’ என தெரிவித்துள்ளார்.
 
ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக தூத்துக்குடி போராட்டத்தின்போது, ’போராட்டம் போராட்டம் என்றிருந்தல் நாடு சுடுகாடு ஆகியிருக்கும் என ரஜினி கூறினார்.’
 
அதன்பிறகு, ரஜினி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்றால் நானே போராடி இருப்பேன் என தன்  கலைஞர் மீது உள்ள மரியாதையை வெளிப்படுத்தினார்.
 
இந்நிலையில், இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் ஓங்கிவரும் நிலையில், ரஜினி தனது ’தர்பார்’ ஆடியோ விழாவில் நேரு அரங்கில் அனுமதி கொடுத்த அதிமுக அரசுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் செய்தியாளர்கள் சிசிஏ குறித்து கேட்டதற்கு இங்கு சினிமா மட்டும் பேசலாம் என்பதைப் போன்று பதில் கூறினார்.
 
எனவே ரஜினி தற்போது அமைதியாய் போராட வேண்டும் என கூறியதற்கும் பல்வேறு தரப்பினர் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி எதைக் கூறினாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் உள்ளது என தமிழருவி மணியன் கூறியுள்ளதற்கு ரஜினி ரசிகர்கள் ஆமோதித்துள்ளதாகத் தெரிகிறது.
 
அதேசமயம் ரஜினிக்கு எதிராக எப்போதும் விமர்சித்து வரும் சீமான் ரஜினிக்கு ஆதரவாக பேசியுள்ள தமிழருவி மணியன் கருத்துக்கு என்ன பதில் முன் வைக்கப்போகிறாரோ என அரசியல் விமர்சகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐயப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட போராட்டக்காரர்கள்! – நெகிழ வைத்த வீடியோ!