Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சங்கி ரஜினி: டிவிட்டரில் கிழிக்கும் நெட்டிசன்கள்!

Advertiesment
சங்கி ரஜினி: டிவிட்டரில் கிழிக்கும் நெட்டிசன்கள்!
, வெள்ளி, 20 டிசம்பர் 2019 (12:50 IST)
ShameOnYouSanghiRajini என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி இணையவாசிகள் ரஜினியை திட்டி வருகின்றனர். 
 
நாடெங்கும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டக்காரர்களை ஒடுக்க போலிஸார் பல இடங்களில் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். இதனால் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இதனை எதிர்த்து திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பேசியிருந்தனர். அதேபோல இணையவாசிகளும் ரஜினியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 
 
காவிக்கு ஆதரவு அளித்துவிட்டு என் மீது காவி சாயம் பூச நினைக்கிறார்கள், நான் அதில் சிக்க மாட்டேன் என டயலாக் எல்லாம் பேசினீர்கள் என கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும், #ShameOnYouSanghiRajini என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்கு பதிவு