Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் அமித்ஷா தர்பார் !

ரஜினியின் அமித்ஷா தர்பார் !
, சனி, 21 டிசம்பர் 2019 (13:27 IST)
(இந்த கட்டுரை இரா காஜா பந்தா நவாஸ் என்பவரின் தனிப்பட்ட கருத்தாகும்)
 
குடியுரிமை  திருத்தச்சட்டத்தால் இந்த நாடே தீப்பற்றி எறிகிறது. நாட்டின் புகழ்ப்பெற்ற பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் அனைத்தும் போராட்டக்களங்கள் ஆகி நிற்கிறது. இந்த நிலையில் தான் திருவாளர் மஹான் ரஜினி தனது திருவாய் திறந்து வன்முறைகள் வேதனை தருகிறது என்கிறார்.
 
Mr.ரஜினி  உங்களுக்கு ஏழு கேள்விகள்:
இந்தியாவின் இன்னும் ஒரு வரலாற்றை இந்த இளைஞர்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இதை தான் வன்முறைகள் வேதனை தருகிறது என்கிறீர்களா Mr  ரஜினி ?
 
அமித்ஷா என்ற விஷம் தான் இந்தியா என்றால் ? அந்த விஷம் காற்றில் பரவட்டுமே ! அதற்கு ஏன் வன்முறைகள் வேதனை தருகிறது என்ற நாடகம் ? யாரை திருப்திப்படுத்த இந்த நாடகம் Mr  ரஜினி  ?
 
விடியல் என்பது விடிவது அல்ல ! அது மக்கள் விழிக்கும் போது, மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவது; அது களத்தில் தான் தெரியும். அதிகாரத்தின் அசைவுகளுக்கு குறிப்பாக ஏன் அமித்ஷாவிற்கு வெண் சாமரம் வீசுகிறீர்கள்  Mr  ரஜினி?
 
இது களம்; போர்க்களம்; மக்களின் வாழ்வியல் சார்ந்தக்களம்; முன்பு ஒரு முறை தூத்துக்குடி செர்லைட் களத்தில்ப் போராளிகளை அவமானப்படுத்தினீர்கள் !  வரலாறு  அனைத்தையும் பதிவு செய்கிறது. உங்களின் உளறல்களை; உங்களின் இயலாமையை, உங்களின் மடமயை வரலாறு பதிவு செய்யாது என்று நினைக்கிறீர்களா Mr  ரஜினி?
 
ஜிஹாதில் சிறந்தது அந்நியாய அரசனிடம் நீதியை எடுத்து சொல்வது ; அதை தான் இந்த மாணவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்; அதை தான் வன்முறை என்கிறீர்களா Mr  ரஜினி?
 
எழுபது வயதில், நாற்பது ஆண்டுகள் சூப்பர் ஸ்டார் நீங்கள் ! அப்பேர்ப்பட்ட நீங்கள் ! ஏன் தேனீக்களைக்  களைத்து தேன் எடுக்கத் துடிக்கும் அமித்ஷாவிற்கு ஏன் இந்த ஜால்ரா Mr  ரஜினி ?
 
கடைசியாக எவ்வளவு கேவலப்படுத்தினாலும் திரும்பப் திரும்ப  
நான் ஒரு மோடி அடிமை ! அமித்ஷாவின் சேவகன் ! என்கிறீர்களா Mr  ரஜினி?

webdunia











            இரா காஜா பந்தா நவாஸ்
                ([email protected])

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

500, 1000 நோட்டுகளை வைத்து சொத்து வாங்கிய சசிகலா! – வருமானவரித்துறை அறிக்கை!