”நான் ஏன் மோடி, அமித்ஷாவை கிருஷ்ணர் அர்ஜுனருடன் ஒப்பிட்டேன்”.. ரஜினி விளக்கம்

புதன், 14 ஆகஸ்ட் 2019 (19:55 IST)
காஷ்மீர் விவகாரத்தில் தான் ஏன் மோடியையும் அமித்ஷாவையும், கிருஷ்ணருடனும் அர்ஜுனருடனும் ஒப்பிட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவை பாராட்டிய ரஜினி, மோடியும் அமித்ஷாவும், மஹாபாரத்தில் வரும் கிருஷ்ணர், அர்ஜுனரைப் போன்றவர்கள் என கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பிரதமர் மோடியும் அமித்ஷாவும், ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளதால், கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன். மேலும் எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்ககூடாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்