மோடியின் மேன் வெர்சஸ் வைல்டு – சுட சுட தமிழ் ராக்கர்ஸில் !

புதன், 14 ஆகஸ்ட் 2019 (11:09 IST)
மோடி பங்குபெற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி நேற்று முன் தினம் ஒளிப்பரப்பான நிலையில் சுட சுட  தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ். பெரிய படங்கள் முதல் சிறியப் படங்கள் வரை அனைத்தும் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் மிகத் துல்லியமான தரத்தில் இவர்களின் இணையதளத்தில் வெளியாகி படங்களின் வியாபாரத்தைக் கெடுக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மோடி கலந்துகொண்டு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்ப்பட்ட மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அடுத்த நாளே தமிழ் ராக்கர்ஸில் வெளியாக ஆரம்பித்துள்ளது. இணையதளத்தில் நல்ல துல்லியமான பிரிண்ட்டில் வெளியாகியுள்ளது.

இதனைப் பார்த்து நாட்டுக்கே சௌகிதாராக (காவலராக) இருக்கும் மோடியின் நிகழ்ச்சிக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். சாகசப் பயணவீரர் பியர் கிரில்ஸுடன் இந்திய பிரதமர் மோடி பங்குபெற்ற சிறப்பு மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. இதை நாடு முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் பிராந்திய மொழிகளிலும் ஒளிபரப்பரப்பப் பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அத்திவரதர் வைபவத்தில் பிறந்த ஆண் குழந்தை – பக்தர்கள் ஆச்சர்யம்