அப்போ மெர்சல்… இப்போ 2.0 –கலைஞர்களின் சம்பளப் புகார் !

புதன், 14 ஆகஸ்ட் 2019 (10:35 IST)
2.0 படத்தில் பணிபுரிந்த சப்டைட்டில் தயாரிக்கும் குழுவினருக்கு இன்னும் லைகா நிறுவனம் சம்பளம் தரவில்லை என டிவிட்டரில் புகார் எழுப்பியுள்ளார்.

2.0 படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி உலக அளவில் மிக சிறப்பான வரவேற்பை பெற்றது.  600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகின. விரைவில் சீனாவில் 50000 திரைகளில் சைனீஸ் மொழியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அந்த படத்துக்காக சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என அவர் டிவிட்டரில் புகார் எழுப்பியுள்ளார். இதையடுத்து ஆதரவாகப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக இதேப் போல மெஹா ஹிட் படம் என விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மெர்சல் படத்தில் பணிபுரிந்த மேஜிக் நிபுணருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என அவர் புகார் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சந்நியாசி ரைசானாந்தாவிடம் ஆசி வாங்கும் நெட்டிசன்கள்