பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், சஹர்சாவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தார்.
புதிய வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன், கடந்த 20 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி பீகாருக்கு என்ன செய்தது என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வேலையின்மை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையால், பீகார் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக பிரியங்கா குற்றம் சாட்டினார். பிரதமர் தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதாகவும், NDA அரசின் ஊழல் குறித்து மௌனம் காப்பதாகவும் அவர் சாடினார்.
மேலும், பீகார் அரசை நிதீஷ் குமார் அல்ல, மத்திய தலைவர்களே பின்னிருந்து இயக்குகின்றனர் என்று கூறிய அவர், அரசியலமைப்பின் வாக்குரிமைக்கு NDA அச்சுறுத்தல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.