தமிழகம் அருகே வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது தொடர்ந்து வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாறுமா? என்ற கேள்விகள் இருந்து வந்தன.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கடலோர பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K