வங்கக் கடலில் தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறுமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா அவர்கள் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அது புயலாக மாறுமா என்பது குறித்து நாளைதான் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 12 மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கனமழை எச்சரிக்கையின் காரணமாக, வரும் 24-ஆம் தேதி தென்காசியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.