சென்னை ராயப்பேட்டையில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் நேற்று இரவு முதல் விடிய விடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையைச் சேர்ந்த யாக்கூப் என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் நேற்று இரவு 9:30 முதல் தேசிய புலனாய்வு முகமை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவருடைய வீட்டில் இருந்து 50 லட்ச ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த பணம் கணக்கில் வராத பணம் என்றும் கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி ஆகிய புகார்கள் வந்த நிலையில், அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின் முடிவில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது, எவ்வளவு ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இந்த சோதனை காரணமாக ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.